மாற்றுத்திறனாளிகள் பள்ளி 2021-22 சேர்க்கை அறிவிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, July 19, 2021

மாற்றுத்திறனாளிகள் பள்ளி 2021-22 சேர்க்கை அறிவிப்பு.


தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் என மொத்தம் 22 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 


இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்கும் இடம் உட்பட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. 


எனவே பார்வைத்திறன் குறைபாடுடைய, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் 5 முதல் 35 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment