அரசு மகளீர் கலைக்கல்லூரி மாணவிகள் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, September 2, 2021

அரசு மகளீர் கலைக்கல்லூரி மாணவிகள் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்.

கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலைக்கல்லூரியில் படிக்கும் 2000 கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் முகாமினை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. காயத்திரி தேவி கோவிந்தராஜ் துவக்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பெரும் தொற்றுநோயை முற்றிலும் தடுக்கும் 333 கிராம ஊராட்சிகளிலும் 100 சதவிதம் தடுப்பூசிகள் போட்டு சொரானா தடுப்பீரினை மக்களிடம் விழிப்புணர்வு 

ஏற்படுத்திடவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசந்திரபானு ரெட்டி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கட்டிகாணப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைப்பெற்றது.

கட்டிகாணப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட பகுதிகளை 100 சதவிதம் கொரோனா தொற்று இல்லாத ஊராட்சியாக திகழ்ந்திடும் வகையில் 100 சதவிதம் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவிகளும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர்  கண்ணன் முன்னிலையில் நடைப்பெற்ற தடுப்பூசிகள் போடும் முகாமினை கட்டிகாணப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி காயத்திரி தேவிகோந்தராஜ் துவக்கிவைத்தார்.

இந்த சிறப்பு முகாமின் போது பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் 2000 க்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் துவங்கியது. இதில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

இந்த கொரோனா தடுப்பூசி முகாமின் போது நாட்டுநலப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி கிருஷ்ணவேணி, மருத்துவ அலுவலர் ஹேமா பிரியா, மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் நடராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ஆயிஷா பேகம்,  முகமத் செரிப், சுகாதார செவிலியர்கள் சாந்தி, முகேஷ் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கல்லூரி பேரசிரியர்களும் கலந்துக் கொண்டனர்கள்.

No comments:

Post a Comment