மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க -107வது நாள். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, July 29, 2021

மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க -107வது நாள்.

மைதருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க -107வது நாள்.

"பசி" உலகம் சுழலும் மையப்புள்ளி, உணவுகள் வேறுபடலாம், அனால் அதன் நிறைவு பசியை போக்கவே. சிறந்த தனங்களில் ஒன்று அன்னதானம், அதை மனமார செய்ய நினைக்கும் சில நல்ல உள்ளங்களின் துணையோடு "பசிக்குதா வாங்க சாப்பிடுங்க" என்கிற உன்னதமான திட்டத்த்தை  பல தடைகளை கடந்து தொடர்ந்து 107 நாட்களை கடந்து பலரின் பசியை போக்கிவருகிறது. 

நேற்றைய 107வைத்து தின உணவை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை மற்றும் சாரண ஆசிரியை செல்வி. அ.ஷர்மிளா பேகம் அவர்கள் இன்று மை தருமபுரி பசிக்குதா வாங்க உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 நபர்களுக்கு மதிய உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார். 

இவரது பல சேவைகளை பாராட்டும் விதமாக மை தருமபுரி தகடூர் மனிதநேயர் விருது, சிங்கப்பெண் விருது 2021 ஆகியவை பெற்றிருக்கிறார். அவருக்கு மை தருமபுரி குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள். உங்களின் பங்களிப்பை எங்களோடு இணைத்து செய்ய தொடர்புக்கு மை தருமபுரி தன்னார்வ குழு - 8667 229134.

No comments:

Post a Comment