காவிரியில் 30 ஆயிரம் கன அடியை எட்டியது, நீர்வரத்து. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, July 26, 2021

காவிரியில் 30 ஆயிரம் கன அடியை எட்டியது, நீர்வரத்து.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளது. 

கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்ததன் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகபடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.  
கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 9,900 கன அடி நீரும், கபினி  அணையிலிருந்து 25,800 கன அடி நீர் என தற்போது மொத்தம் விநாடிக்கு 35,700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இந்த நீரால் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுவில் 35 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து தற்போது  30 ஆயிரம் கன அடியாக உள்ளது. 
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment