ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான திருடுபோன ஆடு மாடுகள் கண்டுபிடிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 28, 2021

ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான திருடுபோன ஆடு மாடுகள் கண்டுபிடிப்பு.

ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான திருடுபோன ஆடு மாடுகள் கண்டுபிடிப்பு - திருடி சென்ற நபர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.

அரூர்  வடகரை அருகேயுள்ள மங்கான் ஏரி பகுதியில் இன்று விடியற்காலை ராஜதுரை, கிருஷ்ணன், லாசர்ஸ், செண்பகம், சேட்டு ஆகியோரின் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான ஆடு மாடுகள் காணாமல் போனதாக தெரிவித்து அதன் உரிமையாளர்கள் விவசாய நிலங்கள், ஏரி, காடுகள் என பல இடங்களில் தேடிவந்தனர்.

இந்தநிலையில் கோபிநாதம்பட்டி பகுதியில் உள்ள புதன் சந்தையில் வாரம்தோறும் ஆடு மாடு கோழி விற்பனை நடப்பது வழக்கம். காணமல் போன ஆடு மாடுகள் இன்று நடைபெறும் சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என என்னி அதன் உரிமையாளர்கள் சந்தேகமடைந்து புதன் சந்தைக்கு சென்று கண்கானித்தனர். அப்போது காணமல் போன ஆடு, மாடுகள்  சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், 

திருடி சென்ற நபர்களை கையும் கலவுமாக பிடித்து கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நந்தினி (26) மற்றும் தரகர்கள் 3 பேரை விசாரனை செய்து வருகினறனர். இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் 3 நபர்கள் இருப்பதாகவும், அவர்களை பிடிக்க செல்லும்போது தப்பியோடி விட்டதாக மாட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த கிராமத்தில் பல முறை ஆடு மாடுகள், வாகன பேட்டரிகள் காணாமல் போனதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment