ராயக்கோட்டை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு தேவயானி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தேவயானி தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தவமணி தனது ஓட்டு வீட்டில் இரவு படுத்து தூங்கினார். அப்போது விடிய விடிய பெய்த மழையினால் வீட்டு சுவர் சேதமாகி இருந்தது.
இன்று அதிகாலையில் வீட்டில் தூங்கிய தவமணி மீது வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி தவமணி தூக்கத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வீட்டுச் சுவர் இடிந்து கிடப்பதையும் தவமணி பலியாகி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பலியான தவமணி உடலை மீட்டு ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
*கோப்புபடம்.
No comments:
Post a Comment