தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், வட்டுவன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜெல்மாரம்பட்டி கிராம நூலகம் கட்டிடம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் வகையில் சீரமைப்பு - கூடுதல் ஆட்சியர் /மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மரு.வைத்தியநாதன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், வட்டுவன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜெல்மாரம்பட்டி கிராமத்தில் சுமார் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட நூலகம் கட்டிடம் கடந்த மூன்று வருடகாலமாக பயன்படுத்த முடியாநிலையில் இருந்து வந்தது.
கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மரு.வைத்தியநாதன், இ.ஆ.ப., அவர்கள் நூலக கட்டிடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது இந்த நூலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கூடுதல் ஆட்சியர் /மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மரு.வைத்தியநாதன், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார், அதன் அடிப்படையில் தற்போது நூலக கட்டிடம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நாள்தோறும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

No comments:
Post a Comment