ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை எம்எல்ஏ ஆய்வு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 30, 2021

ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை எம்எல்ஏ ஆய்வு.

தர்மபுரி சேலம்  நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை எம்எல்ஏ ஆய்வு. 

தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால் ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் வெங்கடேஸ்வரன்  விபத்து ஏற்படும் இடத்தை ஆய்வு செய்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ரவுண்டானா அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.


இதனைத்தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி அருகே சாக்கடை வசதி முறையாக இல்லாததால் தண்ணீர் சாலையில் வழிந்துதோடி வரும் பகுதிகளை ஆய்வு செய்து சாக்கடை கால்வாய் பணிகளை முறையாக அமைத்து தண்ணீர் வெளியேற வசதி செய்து தர கோட்ட பொறியாளர் குலோத்துங்கனிடம் அறிவுறுத்தினார். இதே போல ஏமகுட்டியூர் பகுதியில் உள்ள ஏரிக்கு தடுப்பு சுவர் கட்டவும் மின் வாரிய அலுவலகத்திலிருந்து ஏமகுட்டியூர் செல்லும் சாலையில் இரு இடங்களில் பாலம் அமைக்கவும் ஆய்வு மேற்க்கொண்டார்.

No comments:

Post a Comment