அரூர் அருகே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இரண்டு வாலிபர்கள் போக்சோவில் கைது மற்றொரு வலைவீச்சு.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாபிசெட்டிபட்டி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் இவரது உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை சேர்ந்த ஆதிநாராயணன் மகன் அஜித்குமார் (25) என்பவரும் கடந்த ஓர் ஆண்டாக காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிறுமியை பார்க்க வந்த அஜித்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம் இதனை நோட்டமிட்ட பெத்தூர் கிராமத்தை சேர்ந்த தீத்து மகன் விஜய்(26) மற்றும் தியாகு(36) ஆகியோர் அஜித்குமார் மிரட்டி அங்கிருந்து துரத்தியுள்ளனர் பின்னர் விஜய் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளாராம் அதனை தியாகு தனது மொபைல் போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் .
இதுகுறித்து சிறுமிக்கு நடந்த சம்பவம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது இதுகுறித்து சிறுமியிடம் கேட்டுள்ளனர் இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார் அப்போது சிறுமியின் தாய் காப்பாற்றி விசாரித்துள்ளார் அப்போது சிறுமி தனது தாயுடன் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார் இதையடுத்து சிறுமி அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் மகளிர் போலிசார் வழக்கு பதிவு செய்து பெத்தூரை சேர்ந்த விஜய் தியாகு ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள பாவக்கல்லை சேர்ந்த அஜீத்குமாரை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment