தர்மபுரி மாவட்டம் கூடு இணைப்பு பணியாளர் திட்டம் சார்பாக HIV நோய் தடுப்பு விழிப்புணர்வு:
தர்மபுரி மாவட்டத்தில் கூடு இணைப்பு பணியாளர் (LWS) திட்டத்தின் மூலம்TANSACS வழிகாட்டுதலின் படி, கூடு இயக்குனர் டாக்டர்.சா.கதிரேசன் அவர்களின் ஆணைப்படி 100 ஊராட்சிகளில் HIV நோய் தடுப்பு பணிகளை செய்து வருகிறது.
அதனடிப்படையில் இன்று நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் அக்கிராம மக்களின் மூலமாக கிராம வள வரைபடம் வரையப்பட்டு அம்மக்களுக்கு HIV/AIDS, STI, TB, COVID-19 போன்ற நோய் தடுப்பு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு திட்டம் சார்ந்த தகவல்களை திருமதி. ஆனந்தி இணைப்பு பணியாளர் மூலம் சேகரிக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட வள அலுவலர் திரு.மு.சுப்ரமணி, ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா முருகன், ஊராட்சி செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் திரு.முனுசாமி, மண்டல மேற்பார்வையாளர் திரு.நாகேந்திரன் சுகாதார பணியாளர்கள், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், இணைப்பு பணியாளர் திட்ட பணியாளர்கள், பெருமா, சிவா, ரமணி, கோகிலா, செந்தில்குமார், சின்னசாமி, சுகுனா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment