தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (15.08.2021) நடைபெற உள்ள உள்ள 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
கொரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் எனவும், இச்சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகளில் பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து கண்டுகளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடியேற்ற நிகழ்விற்கு பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, கொரோனா நேய் தடுப்பு மற்றும் இதர பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.
No comments:
Post a Comment