தமிழ்நாடு அரசு ஆணையின் படி, இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் 15.08.2021 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறாது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு ஆணையின் படி, இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் எனவும், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும், இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment