தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுடையோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப, அவர்கள் - தகவல்
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை இன சுழற்ச்சி அடிப்படையில் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த கீழ்கண்ட தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
2. கல்விதகுதி : 8 ஆம் வகுப்பு தோச்சி
3. இனம் : ஆதிதிராவிடர்
4. வயது : 18-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது
வரம்பு தளர்வு உண்டு
5. ஊதியவிகிதம் : ரூ.15700-50000 ( Lovel-1)
விண்ணப்பதாரர்கள் தாங்கள் அண்மையில் எடுக்கப்பட்ட கடவுசீட்டு புகைப்படத்துடன் கூடிய சுய விவர விண்ணப்பத்துடன், கல்விசான்று, சாதிச்சான்று, இருப்பிட சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (போன். 04342-230050) என்ற முகவரிக்கு வருகின்ற 26.08.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment