நாளை மதுபான கடைகள் விற்பனை இல்லை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 14, 2021

நாளை மதுபான கடைகள் விற்பனை இல்லை; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற 15:08.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைப்பிடிக்கப்படுவதால் மதுபானக்கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப, அவர்கள் - தகவல்.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 - 12 விதியின் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவின் படி, நாளை  சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (TASMAC) (ஏற்கனவே கொரோனா நோய் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA,FL 11) அனைத்தும் நாளை மூடப்படும். இந்த உத்தரவினை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment