திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 28, 2021

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்.

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் போராட்டம்.

அரூர்- சேலம் பைபாஸ் போக்குவரத்து ரோட்டில் அரூர்  திருவிக நகரில் திமுக அரசைக் கண்டித்து எம்எல்ஏ  சம்பத்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த சட்டசபை  தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது, கர்நாடக மாநில மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி வழங்கி தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி அமைத்தார்.


தற்பொழுது நீட் தேர்வு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. டீசல், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு வருகின்றது. கர்நாடக அரசு புதிதாக மேகதாது அணைகட்டும்  திட்டத்தை தடுத்த நிறுத்த வேண்டும். உள்ளிட்ட  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரூர் நகர  செயலாளர்  பாபு (எ) அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment