பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 17, 2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி.


காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல்,விலை உயர்வை கண்டித்து ஓசூரில் ஜூலை 17ஆம் தேதி சனிக்கிழமை சைக்கிள் ஊர்வலம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல்,சமையல் கியாஸ், விலை உயர்வை கண்டித்து ஒசூரில் சைக்கிள் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார், முன்னதாக ஒசூர் இரயில் நிலையம் அருகில் தொடங்கிய இந்த சைக்கிள் ஊர்வலம் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் முடிந்தது,ஒசூர் நகர தலைவர் நீலகண்டன் தலைமையில் நடைப்பெற்றது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓசூர் தொகுதி செயலாளர் M,இராமச்சந்திரன், திராவிடர் கழகம் வனவேந்தன்,இந்த பேரணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிடர் கழகம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment