குட்கா, பான் மசாலாக்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, July 27, 2021

குட்கா, பான் மசாலாக்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாக்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை மறைமுகமாக கடைகளில் விற்க்கப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி அவர்களின் உத்தரவின் பேரில், சூளகிரி காவல்நிலையத்தில் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் சூளகிரி காவல் ஆய்வாளர் மனோகரன் ,மற்றும் உணவு பாதுகாப்பு துறை  அதிகாரி முத்துமாரியப்பன் தலைமையில் நடைபெற்றது, இதில் பேசிய காவல் ஆய்வாளரும் , உணவு பாதுகாப்பு அதிகாரியும் அரசு தடை விதித்த பொருட்களை விற்பனை செய்வது குற்றமாகும்.. இனி மறைமுகமாக விற்பனை செய்தவர்கள் சமூக நலனை கருதி முழுமையாக விட்டுவிட வேண்டும் என எச்சரித்த அவர், அதனையும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த கூட்டத்தில் சூளகிரி பகுதிக்குட்பட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் வெங்கடராமசெட்டியார் செயலாளர் மோகன், ஜெயசங்கர், கோவிந்தராஜ் மற்றும் கடை உரிமையாளர்களும் வணிக சங்கத்தினரும்  பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment