தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி , குட்டகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன்(80), இவரது மனைவி சுலோச்சனா(75) ஓய்வுபெற்ற ஆசிரியை, இவர்களது மகன், மகள்கள் வெளியூரில் உள்ள நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிந்தவுடன் கொலையாளிகளை பிடிக்க தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.கலைச்செல்வன். இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு.அண்ணாதுரை மற்றும் திரு.ராஜசோமசுந்தரம் ஆகியோரின் தலைமையில் நான்கு காவல் ஆய்வாளர் களை உள்ளடக்கிய 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து விசாரணையில் பில்பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19), முகேஷ்(19), ஹாரிஸ்(19), சந்துரு(21), எழிலரசன்(26) ஆகியோர் சொகுசு வாழ்க்கை வாழ பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு முதிய தம்பதியை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. பின்னர் 5 நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் ஏழரை பவுண் தங்க நகை, 18 ஆயிரம் ரூபாய் பணம், 4 ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட மேற்கண்ட ஐந்து நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
No comments:
Post a Comment