விபத்தில் சிக்கியவரை மீட்ட அரூர் சட்ட மன்ற உறுப்பினர். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 23, 2021

விபத்தில் சிக்கியவரை மீட்ட அரூர் சட்ட மன்ற உறுப்பினர்.

சாலை விபத்தில் காயம் அடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரூர் எம்எல்ஏ.
தருமபுரி-அரூர் முக்கிய போக்குவரத்து சாலை கர்த்தாங்குளம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த அடையாளம் தெரியாத முஸ்லிம் நபரை ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரூர் எம்எல்ஏ சம்பத்குமார். 

செங்கம் பகுதியை சேர்ந்தவர் தருமபுரியில் குடியிருந்து வரும் அடையாளம் தெரியாத முஸ்லிம் நபர் ஒருவர் தருமபுரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபொது கர்த்தா குளம் பகுதியில் நிலைதடுமாறி எதிரில் இருந்த தடுப்பு சுவற்றல் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தார். அப்பொழுது தருமபுரியில் இருந்து அரூர்  நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தனது காரை நிறுத்தி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் வந்த பிறகு  விபத்தில் காயம் அடைந்தவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment