தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர விவசாயிகளுக்கு அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 24, 2021

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர விவசாயிகளுக்கு அழைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர இது வரை உறுப்பினராக இல்லாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.


புதியதாக உறுப்பினராக சேர விரும்பும் விவசாயிகள் இதற்கான விண்ணப்பபடிவத்தை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்குத் தொகை ரூ.100 மற்றும் நுழைவுகட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்தில் நேரடியாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் வழங்கும் அனைத்து வகையான கடன்கள் மற்றும் சேவைகளையும் விவசாயிகள் பெற்று பயன்பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment