யார்கொள் அணையை உடைக்கும் வரை ஓயமாட்டோம் - மகேந்திரன் பேச்சு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, July 25, 2021

யார்கொள் அணையை உடைக்கும் வரை ஓயமாட்டோம் - மகேந்திரன் பேச்சு.

அரசின் சொத்துக்களை வரம்பு மீறி சேர்ப்பவர்களை தேசிய குற்றமாக கருதி தண்டிக்க பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துவதாக அக் கட்சியின் மூத்த தலைவர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அரசின் சொத்துக்களை வரம்புமீறி முறைகேடாக அதிகளவில் சம்பாதிப்பது கடந்த காலங்களில் அதிகளவில் நடைபெற்றது. அது போன்ற தவறுகளை தேசிய குற்றமாக கருத வேண்டும். தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. 


அதற்கேற்ற வகையில் சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்து தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் மீண்டும் இது போன்ற சொத்து குவிப்புகள் தடுக்க படும். காவிரி , பெண்ணையாறு அணைகளின் நுழைவு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே  கட்டப்படும் அணைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. புதியதாக கட்டப்பட்ட யால்கோல் அணை தென்னிந்தியாவிலேயே அதிகப் பட்ச உயரமாக 162 அடி அளவிற்கு கட்டப் பட்டுள்ளது.  கடந்த 7 ஆண்டுகளாக கட்டப்பட்ட நிலையில் கடந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இதனால் இந்த அணை பாயும் மாவட்டங்கள் நிரந்தரமாக பாதிக்கப் படும். அனை கட்டப்படும் விதிமுறைகளை மீறி இந்த அணை கட்டப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்படும் எந்த கட்டிடங்களையும் மாநில அரசு அகற்றுவதற்கு உரிமை உள்ளது. 


அவ்வாறு உரிய அனுமதி இல்லாமல் கட்டப்ப பட்ட யால்கோல் அணை  அகற்ற பட வேண்டும். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்திற்கு நிரந்தர பாதிப்பை தரும் அந்த அனையினை அகற்ற வேண்டும் என்று அனைத்து விவசாயிகளை ஒன்று திரட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த இருக்கிறோம். அந்த அணையினை இடிக்கும் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஓய்யாது. தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் அந்த அணை ஒவ்வொரு செங்கல்லாக  பிரிக்கபடும். டெல்லியில் நடைபெறும் மூன்று சட்டங்களுக்கு எதிரான விவசாய அமைப்புகளின் போராட்டங்களை ஆதரிக்கிறோம். 

ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் கலந்துக் கொண்டு டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர் என்று கூறினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், உட்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment