பி அக்ரஹாரம் பகுதியில் ஜூலை 25 பசுமைத்தாயகம் நாள் மற்றும் மருத்துவர் அன்புமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாமகவினர் விளையாட்டுப்போட்டி நடத்தினர்.
ஜூலை 25 பசுமை தாயகம் நாள் மற்றும் மருத்துவர் அன்புமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பென்னாகரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பி அக்ரஹாரம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை பாமக மாநில தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகேமணி அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பிவெங்கடேசன் அவர்கள் உடன் இருந்தார் மற்றும் மாவட்ட செயலாளர் நல்லம்பள்ளி சேர்மன் பெரியசாமி மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி பென்னாகரம் சேர்மன் கவிதா_ராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் பின்பு அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை பார்வையிட்டு வீரர்களை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி அவர்கள் ஊக்கப்படுத்தினார்.

No comments:
Post a Comment