அட்மா திட்டத்தின் மூலம் அங்கக வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த இணையவழி பயிற்சி.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், பி.செட்டி அள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் அங்கக வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த இணையவழி பயிற்சி நடத்தப்பட்டது.
பாலக்கோடு வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.சித்ரா அவர்கள் பயிற்சியினை தொடங்கி வைத்தார். பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் திரு.சிவகுமார் அவர்கள் அங்கக வேளாண்மை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விளக்கமளித்தார். உழவியல் துறை உதவி பேராசிரியர் திருமதி.வெண்ணிலா அவர்கள் அங்கக வேளாண்மையில் சான்று பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இணையவழி பயிற்சிக்கு அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி.மகேஷ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னேற்பாடுகள் செய்தனர். மேலும் இவ்இணையவழி பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment