தேய்பிறை அஷ்டமியையொட்டி தருமபுரி புகழ், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சிணகாசி உன்மத்ர காலபைரவர் திருக்கோயிலில் இன்று(31.07.21/சனி) அதிகாலையில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து காலை 06 மணிமுதல் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளினார்.
அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிறப்பு சத்ரு சம்ஹார அலங்காரத்தில் காட்சி அளித்தார். அலங்கார பூஜைகளை திருக்கோயில் சிவாச்சாரியார் இரா.கிருபாகரன் அவர்கள் செய்திருந்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் சண்முகம் அவர்கள் செய்திருந்தார், ஸ்ரீ கால பைரவர் உழவாரப்பணி குழுவின் தலைவர் அங்கமுத்து,செயலர் பிரபாகரன்,பொருளர் முருகன் மற்றும் தேவராஜ், வெற்றி, சண்முகம், கோபி, பிறைசூடன், TVS சண்முகம், முத்துசாமி, பெருமாள், துரை, லோகு, பிரகாசம், ப்ரேம், சண்முகம், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்கோயிலில் சேவை புரிந்தனர்.
No comments:
Post a Comment