OBC பிரிவினர் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, July 20, 2021

OBC பிரிவினர் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை.

OBC பிரிவினருக்கு சாதிச் சான்று வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு           இந்திய அரசுப் பணி மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் OBC பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. 27% இட ஒதுக்கீட்டுக்கான சாதிச் சான்று வழங்கும் போது ஊதியம், வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என ஏற்கனவே மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


OBC பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஆவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இருந்தாலும் OBC பிரிவுக்கான சாதிச்சான்றிதழை தடையின்றியும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment