செய்தியாளர் திரு. ஈஸ்வர்.
தொப்பூர் கட்டமேடு தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது மிகவும் போக்குவரத்து நெரிசல் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் தொப்பூர் மேட்டூர் சாலையும் மிகவும் மோசமாக உள்ளதை அறிந்த எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு ஆய்வு செய்தார். அப்போது சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார், அதைத் தொடர்ந்து 3 முக்கிய அம்சங்களை வலியுறுத்தி டெல்லி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமை பொது மேலாளர் திரு. பிரசாந்த் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் அவை:
- குண்டும் குழியுமாக உள்ள தொப்பூர்- மேச்சேரி சாலை சீரமைத்தல் தொடர்பாக.
- தொப்பூர்- மேட்டூர்-பவானி 4 வழச்சாலையாக விரைந்து அமைக்க வேண்டி.
- தொப்பூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்
கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அணைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என திரு, பிரசாந்த் அவர்கள் உறுதியளி்த்தார்

No comments:
Post a Comment