ஆடி18- டில் வெறிச்சோடி காணப்பட்ட டி. அம்மாபேட்டை, தீர்த்தமலை கோயில்கள். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 3, 2021

ஆடி18- டில் வெறிச்சோடி காணப்பட்ட டி. அம்மாபேட்டை, தீர்த்தமலை கோயில்கள்.

தருமபுரி மாவட்டத்தில் 3-வது  கொரானா அலை தொற்று பரவலை தடுக்க  ஆடி பதினெட்டு நாளில் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால்  மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. திவ்யதர்ஷினி அவர்கள் ஆகஸ்ட் 1 தேதி முதல் 3 தேதி வரை கோயில்களில் பக்தர்கள் செல்வதற்கு தடை  விதித்து அறிக்கை வெளியிட்டார்.

மேலும் கோயில்களில் வருடம் தோறும்  ஐதீக முறைப்படி நடைபெறும் பூஜையை கோயில் அலுவலர்கள் மட்டுமே நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.


அரூர் பகுதியில் அமைந்துள்ள தீர்த்தமலை கிராமத்தில் தீர்த்தகிரி மலைமீது எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில்  ஆடி18 டில் ஏராளமான பக்தர்கள் மலைமீது அமைந்துள்ள 5 புண்ணிய தீர்த்தங்களில்  நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோன்று தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள டி.அம்மாபேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்னம்மாள் தேவி அம்மன் கோயில் ஏராளமான பக்தர்கள் தங்கள் உறவினர்களுடன் ஆடு, கோழி ஆகியவற்றை சாமிக்கு காணிக்கை செலுத்தி அதை வெட்டி பக்தர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

இந்நிலையில்  ஆடி பதினெட்டில் பக்தர்கள் இற்றி வெறிச்சோடி இந்த கோயில் காணப்பட்டது. செல்லம்மாள் தேவி ஆலயத்தில் கோவில்  நிர்வாகத்தின் மூலம் சாமி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதே போன்று தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திலும் நடைபெற்றது ஆனாலும் பக்தர்கள் சாலையோரத்தில் நின்று கர்ப்பூரம் ஏற்றி தீர்த்தகிரி மலையை பார்த்து சாலையோரங்களில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வணங்கி சென்றனர்.

No comments:

Post a Comment