திருநங்ககைள், இலங்கை தமிழர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 250 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 20, 2021

திருநங்ககைள், இலங்கை தமிழர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 250 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டது.

அரூர் புனித மரியண்னை மேல் நிலைப்பள்ளியில் திருநங்ககைள், இலங்கை தமிழர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் தலைமையில் 250 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டது.

ஃகிவ் இந்தியா, கூகுல் ஃபே நிதி உதவியுடன் ஆக்ஷன் எய்டு அசோசியேஷன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, லையோலா பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு மையம் இணைந்து அரூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் நலிவுற்ற மக்களுக்கு covid-19 நிவாரண பொருட்கள் அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் இலங்கை புலம்பெயர் மக்கள், திருநங்கைகள், ஏழை மாணவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என 250 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் 25 கிலோ அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. 

அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு பணியாளர் பெல்லார்மின் ஆக்சன் எயிடு அமைப்பின் இணை இயக்குனர் எஸ்தர் மரிய செல்வம் வழிகாட்டுதலின்படி பொருட்கள் வழங்கப்பட்டது. விஜிலியா மற்றும் செபாஸ்டியன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மாஸ்க் அனிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment