துவக்கப் பள்ளி வளாகத்தில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 9, 2021

துவக்கப் பள்ளி வளாகத்தில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு.

பென்னாகரம் அருகே கள்ளிபுரம் கிழக்கு பகுதியில்  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு  பிடிபட்டது

பென்னாகரம் அடுத்து கள்ளிபுரம் கிழக்கு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கோரோன வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் பள்ளியின் மதில் சுவர் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களில் இருந்து நல்ல பாம்பு ஒன்று இப்பகுதியில் சுற்றி திரிந்து உள்ளது அதைக்கண்ட இப்பகுதி மக்கள் பென்னாகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால்  தீயணைப்பு  மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றித் திரிந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்து பென்னாகரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

No comments:

Post a Comment