அரூரில் அண்ணல் அம்பேத்கர் இரவுநேர பாடசாலை திட்டம் தொடக்கம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 31, 2021

அரூரில் அண்ணல் அம்பேத்கர் இரவுநேர பாடசாலை திட்டம் தொடக்கம்.

அரூரில் யாசட் மையத்தில் அண்ணல் அம்பேத்கர் இரவுநேர பாடசாலை திட்டம் துவங்கியது. 

அரூர் அம்பேத்கர் நகரில் உள்ள யாசட் இளைஞர்கள் சங்கம் சார்பில் முந்தைய காலங்களில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டனர். டிஎண்பிஎஸ்சி, காவலர் தேர்வு, பி.எட் உள்ளிட்ட தேர்வு நேரங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதும், கருத்தரங்கம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 

இளைஞர்களின் பெரும் முயற்சியால் நீண்ட நாள் கனவான இரவு நேர பாடசாலை திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரவு நேர பாடசாலை திட்டம் தினந்தோறும் மாலை ஐந்து முப்பது மணி அளவில் இருந்து 8 மணி வரை நடைபெறும். முதல் நாளான இன்று சுமார் 20 பள்ளி சிறுவர்கள் அண்ணல் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை வகுப்பில் பயின்றனர்.யாசட் இளைஞர்களின் பெரும் முயற்சியால் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கான கனவு நினைவாகி உள்ளது, இளைஞர்களின் சீரிய முயற்சிகளை அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment