சூளகிரி அருகே ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 10, 2021

சூளகிரி அருகே ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியம் ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் ஏரி தூர்வார பொதுமக்கள் சூளகிரி ஒன்றிய குழு தலைவர்.திருமதி லாவண்யா அவர்களுக்கு புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் தங்களது கிராமத்தில் உள்ள ஏரியை  சீரமைத்து தரப்படும் என சூளகிரி ஒன்றிய குழு தலைவர் அவர்கள் உறுதியளித்தனர்.

அதனடிப்படையில் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் அவர்களும்  பொறியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு  உடனடியாக ஓரிரு நாட்களில்  அரசுக்கு முன்மொழிவு  அனுப்பி  அனுமதி பெற்றவுடன் முழுமையாக பணிகள் தொடங்கப்படும் என்று  கிராம பொது மக்களிடம் உறுதியளித்தனர். இந்நிகழ்வில் பொறியாளர்-தீபாமணி, ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பா சீனிவாசன், ஊராட்சி.மன்ற தலைவர் கிரிஜா நாகராஜ், மு.ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ்பாபு, ஜெகதீஷ்கவுடு மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment