நில அபகரிப்பு; "போலீஸ்" அண்ணன் மீது மாற்றுத்திறனாளி தங்கை புகார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 7, 2021

நில அபகரிப்பு; "போலீஸ்" அண்ணன் மீது மாற்றுத்திறனாளி தங்கை புகார்.

எஸ்பி அலுவலகத்தில் நில அபகரிப்பை மீட்டுத்தர போலீஸ் அண்ணன் மீது மாற்றுத்திறனாளி தங்கை புகார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு (50).இவரது பெற்றோர்கள் சின்னப்பன், தங்கம்மாள் இவர்களுக்கு மூன்று மகன்கள், ஐந்து பெண் பிள்ளைகள்.இதில் நான் மாற்றுத்திறனாளி. என்னை நிலம் தருவதாக கூறி இதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவருக்கு திருமணம் செய்தனர்.

எனக்கு ஒரு மகள், மகன் உள்ளளனர். என் கணவர் என்னை விட்டு சென்று விட்டார்.எங்கள் பெற்றோரின் பூர்வீக சொத்துக்களை என் உடன் பிறந்த சகோதரர்கள் தலா 10 ஏக்கர் வீதம் பாகம் பிரித்து கொண்டனர்.எனது பெற்றோர்கள் ஜீவனம்சமாக ஐந்து ஏக்கர் வைத்துக் கொண்டு 2008- ம் வருடம் எனக்கு 90 சென்ட் தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தனர்.

தற்போது பென்னாகரம் போலீஸ் ஸ்டேசனில் எஸ்பிசிஐடி யாக பணியாற்றும் எனது அண்ணன் சென்றாயப்பெருமாள் பெற்றோரின் ஜீவன சொத்து மற்றும் எனக்கு வழங்கிய நிலத்தையும் எங்களுக்கு தெரியாமல் அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செயௌது கொண்டனர். இதுகுறித்து கேட்ட போது எனக்கும்,எனது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனவே எனக்கு உரிய சொத்தை மீட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் சென்றாயப்பெருமாள் தான் காரணம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு மேனுவில் தெரிவிதௌதுள்ளார்.

No comments:

Post a Comment