குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்படதலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 26, 2021

குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்படதலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்படதலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் தருமபுரி மாவட்டத்தில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநலம் மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிக பட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்ல உறுப்பினருக்கு நியமிக்க தகுதியற்றவர் ஆவார்.

இதற்கான விண்ணப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுகொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 13.09.2021 தேதிக்குள் கீழ் கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி மாவட்டம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13.09.2021க்குள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment