மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த (கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரை) வழிமுறைகள் மற்றும் தடுப்பு முறை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, August 21, 2021

மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த (கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரை) வழிமுறைகள் மற்றும் தடுப்பு முறை.

மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின்படி வழிமுறைகள் மற்றும் தடுப்பு முறைகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் தவறாமல் கடைபிடித்து பயிர் சேதத்தை கட்டுப்படுத்தலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்தில் சுமார் 13000 எக்டர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது, இதனை விவசாயிகள் மானவாரி மற்றும் இறவை பயிராக சாகுபடி செய்கின்றனர். 

தற்பொழுது மரவள்ளி பயிரிடப்பட்டு 5 முதல் 5 மாதங்கள் ஆகிய நிலையில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. இப்பூச்சி தாக்குதலால் மரவள்ளிப் பயிரில் மகசூல் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மாவுப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றிக் கட்டுப்படுத்தலாம்.

பாதிப்பு ஆரம்ப நிலையில் கீழ்க்காணும் பயிர் பாதுகாப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்:

  1. அசாடிராக்டின் 1500 ppm - ஒரு லிட்டர் நீரில் 5ml கலந்து பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிக்கலாம்.
  2. மீன் எண்ணெய் ரெசின் சோப்பு - ஒரு லிட்டர் நீரில் 2 ml கலந்து 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ள போது கீழ்க்கண்ட பயிர் பாதுகாப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் நன்கு நனையும் படி தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் விபரம்.

  1. தையோமித்தக்சோம் 25 WG - 10 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம்
  2. புளோனிகாமைடு 50 WG - 10 லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம்
  3. ஸ்பைரோடெட்ராமேட் 150 OD - ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மில்லிலிட்டர்.

பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:

  • ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கக் கூடாது.
  • கைதெளிப்பான் பயன்படுத்தி மட்டுமே தெளிக்க வேண்டும்.
  • செடிகளின் அனைத்து பகுதிகளிலும் வயல் மற்றும் வரப்புகளில் உள்ள
  • செடிகளின் மீதும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும்.
  • மேலும் பாதிப்படைந்த செடிகளில் நுனிப்பகுதியை மாவு பூச்சியுடன் சேர்த்தோ அல்லது பாதிக்கப்பட்ட காய்ந்த செடிகள் முழுவதும் சேகரித்து அழித்தல் வேண்டும்.

மேற்கண்ட தடுப்பு முறைகளை விவசாயிகள் தவறாமல் கடைபிடித்து பயிர் சேதத்தை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment