பீங்கன் இல்லாத மின் கம்பத்தில் பறவைகள் அமர்வதால் உயிரிழப்பதாக வெளியான செய்திக்கு அரூர் கோட்ட செயற்பொறியாளர் பதில். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 30, 2021

பீங்கன் இல்லாத மின் கம்பத்தில் பறவைகள் அமர்வதால் உயிரிழப்பதாக வெளியான செய்திக்கு அரூர் கோட்ட செயற்பொறியாளர் பதில்.

நமது தகடூர் குரல் செய்தி தளத்தில் கடந்த 29ஆம் தேதி அரூர் நம்பிப்பட்டி பகுதியில் பீங்கன் இல்லாத மின் கம்பத்தில் பறவைகள் அமர்வதால் உயிரிழப்பதாக வெளியான செய்திக்கு இன்று (31.08.2021) அரூர் கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் துறைரீதியான பதிலை ட்விட்டர் தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார், அதில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

தெற்கு அருர் இ& ப பிரிவிற்குட்பட்ட நம்பிப்பட்டி கிராமம், தனியார்  பள்ளிக்கு  அருகில் பீங்கான் இல்லாத மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்படுவதால் பறவைகள் உயிரிழக்கிறது என்ற புகார் குறித்து நேரடியாக சென்று கள ஆய்வு மேற் கொண்டதில் மின் கம்பம் எண் 143 ல் உயிரழுத்த/தாழ் வழுத்த மின் பாதை செல்கிறது. அவ்விரு மின்பாதைகளுக்குண்டான இடைவெளி 4 அடியாக உள்ளது மேலும், உயரழுத்த மின்னழுத்த பாதையில் R ,Y B phase களில் HT Pin Insulator சரியான முறையில் Binding அடிக்கப்பட்டுள்ளது.

தாழ்வழுத்த மின் பாதையில்  R,Y, B Phase-களிலும் LT Pin Insulator மற்றும் Neutral மின் பாதையில் Aluminum knob அமைத்து சரியான முறையில் Binding அடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அம் மின் கம்பத்தில் எவ்விதமான மின் கசிவு ஏற்படவில்லை என்பது உறுதியாகிறது.

மேலும், மின்கசிவினால் பறவைகள் உயிர் இழக்கவில்லை என்பதும் உறுதியாகிறது. மேலும், புகார் அளித்த  திருமதி. அமுதா  என்பவரிடம் விசாரித்தில் தாழ்வழுத்த  மின் பாதையில் Neutral Line-ல் பீங்கான் இல்லாததால் தான் மின் கசிவு ஏற்பட்டு பறவைகள் உயிரிழிக்கிறது என கூறினார் .

Neutral மின் பாதைக்கு Aluminum Knob மட்டுமே அமைக்கப்படும் என்பதை திரு.அமுதா அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .  அவ்விளக்கத்தினை திருமதி.அமுதா அவர்களும் ஏற்று கொண்டார், என அரூர் கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் ட்விட்டரில் மாவட்ட ஆட்சியர் மூலம் நமது தகடூர் குரலுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த குறிப்பிட்ட மின் கம்பத்தில் பறவைகள் அமர்வதால் உயிரிழப்பு ஏன் ஏற்படுகிறது என அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. 

  

No comments:

Post a Comment