தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 19, 2021

தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு  இணை இயக்குனர் மேற்கு மண்டலம் உத்தரவின்படியும், தருமபுரி மாவட்ட அலுவலர் அறிவுரையின்படியும்,தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் கொரோனா மூன்றாம் அலை கொரோனா பரவல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை  விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். 

தீயை அணைக்கும் முறைகள்,தீயின் வகைகள், முதலுதவி, தீ அணைப்பான் பயன் முறைகள், நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை,இடி, மின்னல் சமயங்களில் எப்படி காப்பாற்றிக்கொள்வது, கேஸ் சிலிண்டர் தீ விபத்து, மின் தீ விபத்துகள், மற்றும் எவ்வாறு தீயை தடுப்பது மற்றும் அணைப்பது என்று பொதுமக்களுக்கு அவர் பல்வேறு தீ தடுப்பு விழிப்புணர்வு செய்தார். மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.இதில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment