பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 27, 2021

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ/மாணவியர் தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இதுகுறித்து மாவட்ட தெரிவித்துள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம் மாணவ மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் 30.09.2021க்குள்ளும், புதியது இனங்களுக்கு 05.11.2021-க்ககுள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 15.10.2021 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 14.11.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 16.11.2021 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 31.12.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment