கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை பணியாற்றிய மை தருமபுரி தன்னார்வலர்களுக்கு ஆல் இந்தியா பிரஸ் மீடியா சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மை தருமபுரி சமூக அமைப்பு தன்னார்வலர்கள் சார்பாக கொரோனா ஊரடங்கில் பல சமூக சேவைகள் செய்து வருகின்றனர். கொரோனாவால் வீட்டில் தனிமையில் இருந்தோர், சாலையோர ஆதரவற்றோர், பாதுகாப்பில் இருந்த காவல்துறையினருக்கு உணவு வழங்கல் நூறு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தருமபுரி மாவட்டம் சார்பாக கோவிட்-19 தடுப்பூசி மையம் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சமுதாய நலன் கருதி தன்னலமற்ற தன்னார்வலப்பணியை மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களது சேவை மனப்பான்மையை பாராட்டி ஆல் இந்தியா பிரஸ் மீடியா மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.திரு.பாலமுருகன் சார்பாக, நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்..வாசுதேவன், மருத்துவர்.ஜெகதீசன், சிறப்பு விருந்தினராகவும் மருதம் நெல்லி குழுமம் தலைவர் Dr.K.கோவிந்த் அவர்களால் சான்றிதழ்களை மை தருமபுரி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment