பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, August 13, 2021

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மஞ்சவாடி ஊராட்சியில் குடிமராமத்து பணிகள் 2019-2020 திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட புங்கன் ஏரி பணியினை ஆய்வு செய்தார்கள். மேலும், புங்கன் ஏரிக்கு அருகில் உள்ள மாபெரும் செடிகள் நடுதல் பணிகளை பார்வையிட்டார்கள். 

நடவு செய்யப்பட்டுள்ள செடிகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பட்டுக்கோணம்பட்டி ஊராட்சி ஆவாரங்காட்டூர் குட்டையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆய்வின் போது நீர்வரத்து கால்வாய் தூர்வாருதல், குட்டையின் பரப்பளவு அளவீடு செய்தல், குறைபாடுகளை ஒரு வார காலத்திற்குள் நிவர்த்தி செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தினார்.

பட்டுக்கோணம்பட்டி ஊராட்சி, மோட்டுப்பட்டி கிராமத்தில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை மற்றும் நீர்வரத்து கால்வாய் அமைக்கும் பணியினையும், வெங்கடசமுத்திரம் ஊராட்சி, வீடு கட்டும் பணியினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

பசுமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் PMAY, Green House, MGNREGS, மற்றும் அனைத்து திட்டப்பணிகளின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில், பணி துவக்கப்படாமல் உள்ள பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளின் நிலையினை ஆய்வு செய்து நிலுவை பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் திருமதி.பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. அமரவேல், திரு.கணேஷ் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment