ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு, சுகாதாரப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 5, 2021

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு, சுகாதாரப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நேற்று (05.08.2021) நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 45 நலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு இலவச
வீட்டுமனைப்பட்டா, மயானபாதை வசதி, அம்பேத்கர் படிப்பகம், சமுதாயக்கூடம், மற்றும் பழங்குடியின மக்களுக்கு கறவைமாடு, பவர்டில்லர் போன்றவற்றை வழங்குமாறும், சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்கு இலவச வீடு, சுகாதார பணிகளை மேற்கொள்ள நிரந்தர பணியாளர் பணியிடங்களை நிரப்புவது, ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்குதல் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முன்னிலையில் விவாதித்தனர். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தருமபுரி சார் திருமதி.சித்ரா விஜயன்,இ.ஆ.ப., அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி.தேன்மொழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சீனிவசசேகர் நகராட்சி ஆணையர் திருமதிச.சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment