உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, August 8, 2021

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

ஆகஸ்ட் 8 இன்று தர்மபுரி BDO அலுவலகம் அருகே உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 24,25,26 ஆகிய வார்டுகளில் விரைவில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தல் சம்மந்தமாக திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக வார்டு செயலாளர் முல்லைவேந்தன் தலைமை வகித்தார் 

ஆலோசனை கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் பி.சுப்பிரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி நகர சபை தலைவர் தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்  வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது எனவும்  ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், ரவி, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment