கல்லாற்றில் வீணாக வெளியேறும் மழைநீர்: தடுப்பணை கட்ட கோரிக்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 24, 2021

கல்லாற்றில் வீணாக வெளியேறும் மழைநீர்: தடுப்பணை கட்ட கோரிக்கை.

அரூர் அருகே கல்லாற்றில் வீணாக வெளியேறும் மழைநீர்: தடுப்பணை  கட்ட கோரிக்கை. 

தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதிக்கு உட்பட்டது  கல்வராயன்மலை தொடர்ச்சி அடிவார பகுதியில் அமைந்துள்ள சிட்லிங் மலை கிராம பஞ்சாயத்து.இந்த  கல்வராயன் மலையில்  உருவாகும் கல்லாறு  சிட்டிலிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பெரியபட்டி வழியாக 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தென்பெண்ணை ஆற்றில் கலந்து சாத்தனூர் டேம் சென்றடைகிறது. மழை காலங்களில்  கல்லாற்றில் வெளியேறும் மழைநீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தி  பாய்ந்தோடுகிறது.

கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங்,, பெரியபட்டி பஞ்சாயத்து கிராம பகுதிகள்  பயன்பெறும் வகையில் வீணாகும் மழை நீரை தடுப்பணை கட்டி சேமிக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலின் போது அனைத்து வேட்பாளர்களும் இந்தப் பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்து செல்கின்றனர். வெற்றி பெற்றபின் தடுப்பணை கட்டுவதற்காக எந்த  நடவடிக்கை இல்லை.

நரிப்பள்ளி பகுதியில் கல்லாற்றின் குறுக்கே தற்பொழுது உள்ள  சிறிய தடுப்பணை  மழைக்காலங்களில் அடிக்கடி உடைந்து வெளியேறும் மழைநீர் விவசாய நிலங்களில் தொடர்ந்து  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் செங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கிரி, நரிப்பள்ளி பகுதியில் உள்ள கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி இரண்டு கால்வாய் அமைத்து ஒரு கால்வாயில் தர்மபுரி மாவட்ட கிராம பகுதிகளுக்கும் மற்றொரு கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மோத்தகல், மலையனூர்,டி.வேலுர், ரெட்டியாரபாளையம் உள்ளிட்ட கிராம விவசாய நிலங்கள், பொது மக்கள் பயன்பெறுவார்கள் என அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment