வனப்பாதுகாவலரை கடித்த மலைப்பாம்பு: வனப்பகுதியில் விட்ட வனத் துறையினர். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 25, 2021

வனப்பாதுகாவலரை கடித்த மலைப்பாம்பு: வனப்பகுதியில் விட்ட வனத் துறையினர்.

வனப்பாதுகாவலரை கடித்த மலைப்பாம்பு: வனப்பகுதியில் விட்ட வனத் துறையினர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர்  பகுதியில் மலைப்பாம்பு சுற்றுவதாக மொரப்பூர்  வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று இரவு வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று டார்ச் லைட் வெளிச்சத்தில் மலைப்பாம்பை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட லூர்துசாமி என்ற வணப் பாதுகாவலரை பாம்பு கடித்தது. அவரை அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை பையில் அடைத்து  கீழ்மொரப்பூர் வனப்பகுதியில் பத்திரமாக  வனத்துறையினர் விட்டனர். 

அரூர் திருவிக நகரில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு.

அரூர் டவுன் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவிக நகரில் மண்ணுளியம்பாம்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் வன அலுவலர் சிவக்குமாருக்கு கொடுத்த தகவலையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் 2 அடி நீளமுள்ள  மண்ணுளியம்பாம்பு  பிடித்து பையில் அடைத்து கொளகம்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.

No comments:

Post a Comment