பெற்ற பிள்ளைகளால் வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஆதரவின்றி தவித்து வரும் அவல நிலை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, August 18, 2021

பெற்ற பிள்ளைகளால் வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஆதரவின்றி தவித்து வரும் அவல நிலை.

 சூளகிரி அருகே பெற்ற பிள்ளைகளால் வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஆதரவின்றி தவித்து வரும் அவல நிலை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி ஊராட்சிக்குட்பட்ட குக்கலப்பள்ளி கிராமத்தில் வசித்த வந்த மூதாட்டி சித்தம்மா (76) சித்தம்மாவிற்க்கு திருமண ஆகி சித்தப்பா என்ற கணவரும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கணவர் சித்தப்பா உடல்நல குறைவால் காலமானார்.

தனது மகனுடன் வாழ்ந்த வந்த  நிலையில் சித்தம்மாவின் ஒரு ஏக்கர் நிலைத்தை தனது மகன் விவசாயம் செய்து வந்தார். போதிய கண்பார்வை இன்றி தவித்த வந்த சித்தம்மா அரசு உதவியுடன் கண் அறுவை சிகிச்சை சென்றார் . அப்படி செல்லும் போது சித்தம்மா பெயரில் உள்ள சொத்தை தனது மகன் பெயருக்கு சித்தம்மாவை வழுகட்டாயமாக கையெப்பம் போடப்பட்டு பின் கண் அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு தனது மருமகள் அழைத்து சென்றாள்.

படிப்பறிவு இல்லாத மூதாட்டிக்கு ஏதோ அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ள நிலையில் கையெப்பம் போடப்பட்டது என நினைத்துக்கொண்டார். தகவல் அறிந்த மூதாட்டி தனது மகனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆதரவு இன்றி இருந்த மூதாட்டி பிள்ளைகளால் வெளியேற்றப்பட்டார். பின் சப்படி என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கூலி வேலை செய்து வந்தார்.

போதிய பணமும் மற்றும் உணவும் இன்றி தவித்து வந்த மூதாட்டி தனது சொத்துக்களை ஏமாற்றியதை நினைத்து நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகினார் சித்தம்மா. பல மனிதர்களில் உதவி மற்றும் ஆலோசனையை கேட்டு சித்தம்மா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது சொத்துக்களை மீட்டு தருமாறு மனு அளிக்கப்பட்டது.

மனு பெற்றுக்கொண்ட ஓசூர் சார் ஆட்சியர் அவர்கள் . தங்களுக்கு சொந்தமான சொத்துகளை மீட்டு தந்து தங்களுக்கு உதவி செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்ககும் என மூதாட்டிக்கு உறுதியளித்தார்.

No comments:

Post a Comment