கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு நாளில் வெறிச்சோடிய ஒகேனக்கல். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 3, 2021

கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு நாளில் வெறிச்சோடிய ஒகேனக்கல்.

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிவார்கள்.  இந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக  ஒகேனக்கல் வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.  இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து காணப்படுகிறது.  இந்த தண்ணீர் வரத்தும் சென்ற ஆண்டை காட்டிலும் குறைவாகவே உள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் புனித நீராடி புத்தாடை உடுத்தி, அங்குள்ள காவிரி அம்மனை வழிபடுவது வழக்கம். 


ஆனால் இந்த ஆண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஒகேனக்கலில் 3 நாட்கள் நடைபெறும் 


அரசு விழாவாக நடைபெறுவது வழக்கம்.  ஆனால் கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் இல்லங்களிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment