ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை; மடம் செக்போஸ்டில் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் போலீசார். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 23, 2021

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை; மடம் செக்போஸ்டில் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் போலீசார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை மடம் செக்போஸ்டில் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் போலீசார்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு காவிரி ஆற்றில் புனித நீராடி ஆற்றுநீரை தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்கு செல்ல தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது இதன் காரணமாக பென்னாகரம் அடுத்து மடம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் சுற்றுலா பயணிகள் வருவதை ஒகேனக்கலுக்கு அனுமதியில்லை என்றும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர் இதனால் ஒகேனக்கல் காவிரி ஆறு சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்டு அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டு இருந்தது இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு அதிகமான வாகனங்களில் வரத்தொடங்கின, செக்போஸ்டில் காவல்துறையினர் அனுமதிக்காததால் சுற்றுலா  பயணிகள் ஏமாற்றம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எந்த ஒரு அறிவிப்பும் வராததால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மறுப்பு.

No comments:

Post a Comment