மாவட்டத்தில் தகுதியுள்ளவர்களிடமிருந்து பத்மவிருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Monday, August 2, 2021

மாவட்டத்தில் தகுதியுள்ளவர்களிடமிருந்து பத்மவிருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.


பத்மவிருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு மேண்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்மவிபுஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு குடியரசுதின விழாவின்போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்ஷினி,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment