பள்ளிகள் திறப்பு இரு அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, September 1, 2021

பள்ளிகள் திறப்பு இரு அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டைம் மற்றும் நல்லம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை மற்றும் நல்லம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 225 அரசு பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 122 தனியார் பள்ளிகள் என மொத்தம் 353 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்தனர். இவற்றில் இட வசதிகளை பொறுத்து ஒரு சில பள்ளிகளில் மட்டும் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுழற்ச்சி முறையில் (Alternative Days Class) வகுப்புகள் நடத்திட திட்டமிட்டுள்ளனர்.

9 முதல் 12 ஆம் வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பள்ளிகள் திறப்பிற்கான பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். .

இதனை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த அலுவலர்கள் குழு கடைபிடிப்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ஷகிலா, தலைமையாசிரியர்கள் திரு. அண்ணாதுரை, திரு. இரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி புவனேஸ்வரி முருகன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment