மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, September 1, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID SMART CARD பெறுவதற்கு உடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் - மாவட்ட  ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்.

ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் இதுகுறித்து மாவட்ட தெரிவித்துள்ளதாவது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID SMART CARD வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தருமபரி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் (UDID SMART CARD ) வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID SMART CARD பெறுவதற்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மற்றும் விண்ணப்பித்தும் இதுவரை அடையாள அட்டை பெறப்படாத மாற்றுத்தறினாளிகள் கீழ் காணும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் வருகின்ற 10.09.2021 வெள்ளிக்கிழமைக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UDID SMART CARD பெறுவதற்கு தேவைப்படும் சான்றுகள்

  1. தேசிய அடையாள அட்டையின் நகல், மருத்தவ சான்றுடன் கூடிய அனைத்து பக்கங்களின் நகல்
  2. ஆதார் அட்டை நகல்
  3. விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளியின் பாஸ்போட் அளவு புகைப்படம்
  4. துண்டு சீட்டில் மாற்றுத்திறனாளிகள் கையொப்பம்/கைரேகை பதிவு

மேற்காணும் ஆவணங்களை சமர்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID SMART CARD) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்தினாளிகள் இந்த வாய்பினை பயன்படுத்தி கொண்டு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID SMART CARD பெறுவதற்கு உடன் விண்ணப்பிக்கலாம். 

No comments:

Post a Comment