தாலிக்கு தங்கம் திட்டம் - 130 பயனாளிகளுக்கு தலா 8கி தங்கம் வழங்கப்பட்டது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 17, 2021

தாலிக்கு தங்கம் திட்டம் - 130 பயனாளிகளுக்கு தலா 8கி தங்கம் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.32.55 இலட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.32.55 இலட்சம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:தமிழக அரசு, பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்த்திற்காகவும், பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதில், கிராமப்புறங்களில் வாழ்கின்ற பெண்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, தனிநபர் வருமானத்தைப் பெருக்குவதனால் குடும்ப பொருளாதாரம் உயரும், குடும்பப் பொருளாதாரம் உயர்ந்தால் கிராமத்தின் பொருளாதாரமும், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் என்பதற்கினங்க, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம் (மகளிர் திட்டம்) மூலம் கிராமப்புறங்களில் வாழ்கின்ற கிராமப்புற ஏழை, எளிய பெண்களுக்கு பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச் செய்து, உற்பத்தி பொருட்களை சந்தையிடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும், தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000/- நிதியுதவியும், 8 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியும் 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கி வருகிறது. 

பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே திருமண நிதி உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமூக நலத்துறை சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை என பெயர் மாற்றம் செய்து மகளிருக்கு முக்கியத்துவத்தை அளித்துள்ளது. குழந்தை திருமணங்களை தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கி அதன் மூலம் சுயமாக தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தில் மேம்பட வேண்டும். பெண்கள் படிக்கவில்லை என்றால் அவர்களின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

எனவே பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்று பொருளாதாரத்தை வலுப்படுத்தி குடும்பத்தை தலைமை ஏற்று நடத்தும் அளவிற்கு மாற வேண்டும். அரசு பணிகளுக்கு செல்வதற்கு பெண்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் முதல் உயர் பதவிகளை அடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றயை தினம் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 123 பட்டதாரி அல்லாதோர் பயனாளிகளுக்கு, 984 கிராம் தாலிக்குத் தங்கமும், ரூ.30,75,000 நிதி உதவியும். டாக்டர் முத்துலட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பட்டதாரி பயனாளிகளுக்கு, 40 கிராம் தாலிக்குத் தங்கமும், 2 பட்டதாரி அல்லாதோர் பயனாளிகளுக்கு, 16 கிராம் தாலிக்குத் தங்கமும், 1,80,000 நிதி உதவியும் என மொத்தம் ரூ.32.50 இலட்சம் நிதியுதவியுடன் 1040 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட வரும் இதுபோன்று பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு, அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று, வாழ்வில்
வளம்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.நாகலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திருமதி.மாது சண்முகம், திரு.கே.எஸ்.ஆர்.சேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மணிவண்ணன், திருமதி.சகிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment